விருதுநகர் காளியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
ADDED :2607 days ago
விருதுநகர் : விருதுநகரில் விஸ்வகர்மா ஐந்துவகுப்புக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயிலில் 18 வது ஆண்டு பூக்குழி திருவிழா நடந்தது. விழாவையொட்டி பெண்கள் பால்குடம், பூக்குழி ,அக்னிசட்டி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் அம்மன் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.