இலத்தூர் கோயிலில் இன்று பறவைக்காவடி திருவிழா
ADDED :5055 days ago
புளியரை : இலத்தூர் அழகுநாச்சியம்மன் கோயிலில் இன்று (31ம் தேதி) பறவைக்காவடி திருவிழா நடக்கிறது. இலத்தூர் அழகுநாச்சியம்மன் கோயில் திருவிழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ரத வீதிஉலா நடந்து வருகிறது. இன்று (31ம் தேதி) அதிகாலை பூக்குழி இறங்குதல் நடக்கிறது. அதனை தொடர்ந்து மேற்கே சங்கரவிநாயகர் கோயிலில் இருந்து பறவைக்காவடி திருவிழா நடக்கிறது.