உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 1,008 பால்குட ஊர்வலம்

ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 1,008 பால்குட ஊர்வலம்

பூந்தமல்லி : நசரத்பேட்டையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், 1,008 பால்குட ஊர்வலம் நடந்தது. பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில், பிரசித்திப் பெற்ற ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், பருவமழை வேண்டி யும், விவசாயம் செழிக்கவும், ஆண்டுதோறும், 1,008 பால்குடம் ஊர்வலம்நடத்துவது வழக்கம்.இந்நிலையில் இந்தாண்டிற்கான பால்குட ஊர்வலம், நேற்று நடந்தது.பெரிய பாளையத்தம்மன் கோவிலில் இருந்து துவங்கிய இந்த பால்குடம் ஊர்வலத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், அண்ணா தெரு, பசுபதி தெரு, காந்தி தெரு வழியாக சென்று, கோவிலில் முடிந்தனர். இதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனின் அருளை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !