ஆடிப்பூரத்தையொட்டி கஞ்சிக்கலய வீதி உலா
ADDED :2616 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம், ஆதிபராசக்தி பக்தர்கள் சார்பில், ஆடிப்பூரத்தையொட்டி கஞ்சிக்கலய வீதி உலா நடந்தது. குமாரபாளையம் அருகே, ஓலப்பாளையம், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ஆதிபராசக்தி பக்தர்கள், ஆடிப்பூரத்தையொட்டி, கஞ்சிக்கலய வீதி உலா, சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று, காவிரி ஆற்றில் இருந்து செவ்வாடை அணிந்தவாறு, வேப்பிலைகளுடன் கஞ்சிக்கலயம் எடுத்தவாறு விழா பந்தலை வந்தடைந்தனர். அங்கு, கஞ்சிக்கலயங்களை வைத்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இதன் பின் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.