உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவரசங்குப்பம் கோவிலில் சுவாதி சுதர்சன ஹோமம்

பூவரசங்குப்பம் கோவிலில் சுவாதி சுதர்சன ஹோமம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமிநரசிம்மர் பெருமாள் கோவிலில், 203வது சுவாதி சுதர்சன நரசிம்ம ஹோமம் நடந்தது. சுவாதியை முன்னிட்டு, காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை மூலவருக்கு அபிேஷகமும், காலை 7:30 மணிக்கு மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பின், காலை 8:30 மணிக்கு சுவாதி ஹோமம் ஆரம்பம், வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் யாகசாலைக்கு புறப்பாடு மற்றும் காலை 9:00 மணிக்கு சுதர்சன நரசிம்ம ஹோமம் ஆரம்பம், சுதர்சன பெருமாள், நரசிம்ம பெருமாள் மந்திரங்கள் ஜெபம் செய்யப்பட்டு, ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பகல் 11:30 மணிக்கு வசுத்தாரா ஹோமம், பகல் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. பகல் 12:30 மணிக்கு கலசம் புறப்பாடாகி மூலவர் மற்றும் உற்சவர் விக்ரஹங்களுக்கு கலச தீர்த்தம் சேர்க்கப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு ேஹாமத்தில் பூஜை செய்த கயிறு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயக்குமார், கோவில் முதன்மை அர்ச்சகர் பார்த்தசாரதி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !