பஞ்சம் நீங்க வேண்டி பல்லடத்தில் கஞ்சி கலய ஊர்வலம்
ADDED :2606 days ago
பல்லடம்: பஞ்சம் நீங்க வேண்டி, பல்லடத்தில், ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினர், கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். உணவு பஞ்சம் நீங்கவும், மழை பொழிந்து, தொழில் சிறக்கவும் வேண்டி, மாணிக்காபுரம் ஆதிபராசக்தி வார வழிபாட்டு குழுவினர், வழிபாடு நடத்தினர். பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு பொன்காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. வார வழிபாட்டு மன்ற தலைவி வள்ளியம்மாள் தலைமை வகித்தார். 200க்கும் மேற்பட்ட பெண்கள், கஞ்சி கலயம் சுமந்தபடி, ஊர்வலமாக சென்று, பூஜை செய்து வழிபாடு செய்தனர்.