கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
ADDED :2652 days ago
திண்டிவனம்: திண்டிவனம் வாசவி கிளப் சார்பில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு 108 பால் குட ஊர்வலம் நடந்தது. திண்டிவனம் வாசவி கிளப், வாசவி கிளப் வனிதா மற்றும் வாசவி கிளப் டிரெண்ட்செட்டர்ஸ் சார்பில் திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு 108 பால் குட ஊர்வலம் நடந்தது.இதன் தொடர்ச்சியாக, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், வாசவி கிளப் உதவி ஆளுநர் சிவக்குமார், மாவட்ட பொருப்பாளர்கள் வெங்கட்ரமணன், சங்கர், வாசவி கிளப் தலைவர்கள் நாகராஜன், பாரதி பாஸ்கர்,லோகநாதன், செயலாளர்கள் அரிபுருஷோத்தம்மன், மஞ்சுபார்கவி, ஹரிஷ் அண்ணாமலை, பொருளாளர்கள் கார்த்திகேயன், பூர்ணிமா, மாவட்டத்தலைவர் வைத்தீஸ்வரன், வட்டார தலைவர் மனவளக்கலை பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.