உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருசியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

இருசியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

அந்தியூர்: அந்தியூர் அருகே, ஒலகடம், கூனாக்காபாளையம் பகுதியில், பிரசித்தி பெற்ற இருசியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. வரும், 24ல் கொடியேற்றம் நடக்கிறது. செப்.,1ல், மஹா முனியப்பன், கருப்புசாமி, பாட்டப்பன் ஆகிய சுவாமிகள், தேரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும். வெடிக்காரன்பாளையத்தில் உள்ள வனக்கோவிலுக்கு, இருசியம்மனை பல்லக்கில் வைத்து, பக்தர்கள் கொண்டு செல்வர். அன்றிரவு தரிசனத்துக்கு சாமி வைக்கப்படும். செப்.,2ல், மீண்டும் கோவிலுக்கு வரும். விழா இறுதி நாளாக, 14ல் மறு பூஜை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !