திருநகர் சித்தி விநாயகர் கோயிலுக்கு 2 அணையா விளக்கு
ADDED :2714 days ago
திருநகர், திருநகர் சித்தி விநாயகர் கோயிலுக்கு இரு அணையா விளக்குகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இக்கோயிலில் சில நாட்களுக்கு முன் பக்தர் ஒருவர் உபயமாக அணையா விளக்கு வழங்கினார். அது நவக்கிரகங்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு பக்தர் இரு அணையா விளக்குகளை உபயமாக வழங்கியுள்ளார். கூண்டுக்குள் விளக்கு அமைக்கப்பட்டு மேல்பகுதியில் எண்ணெய் ஊற்றினால் விளக்கிற்கு வரும். அதிக எண்ணெய் கீழ் பகுதிக்கு சென்று மீண்டும் விளக்கிற்கு வரும் வசதியுள்ளது. இந்த விளக்குகள் விநாயகர், காசிவிஸ்வநாதர் சன்னதிகளில் அமைக்கப்பட உள்ளன என கோயில் அலுவலர் இதயராஜன் தெரிவித்தார்.