உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளையல் விற்ற வரலாறு

வளையல் விற்ற வரலாறு

தாருகாவனத்தில் இருந்த முனிவர்களின் மனைவியர் பிக்சாடனர் வேடமிட்டு வந்த சிவபெருமானை நோக்கிக் காம வசப்பட்டனர். கை வளையல் கழல பிச்சை இட்டு வளையலைப் பறி கொடுத்தனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள், அந்த ரிஷபத்தினிகளை ‘மதுரையில் வணிகப் பெண்களாகப் பிறப்பீர்!” என்று சாபமிட்டு, தொடர்ந்து, சிவபெருமான் உங்களைத் தொட்டதும் சாபம் அகலும்’ என்று சாப விமோசனமும் கூறினர். அதன்படிசோமசுந்தரக் கடவுள் வளையல் வியாபாரியாக வேடம் தாங்கி வணிகத் தெருவிற்கு வந்தார். அத்தெருவில் இருந்த வணிக மகளிர் தத்தம் மாளிகைகளில் இருந்து வெளிப்பட்டனர். வளையல்களின் அழகை விட வளையல் வியாபாரியின் அழகு அவர்களைக் கவர்ந்தது. வளையல் போட்டுக்கொள்ள போட்டி இட்டு கைநீட்டினர். வளையல்போடும் சாக்கில் வியாபாரியாய் வந்த இறைவன் அவர்களைத் தீண்டினார். பின் வியாபாரி மறைய வானத்தில் சிவலிங்கம் தோன்றியது. ரிஷிபத்தினிகளின் சாபம் நீங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !