கிருஷ்ணகிரி தூய விண்ணரசி ஆலய தேர்த்திருவிழா
ADDED :2710 days ago
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் தூய விண்ணரசி அன்னை ஆலயத்தின் தேர்த்திருவிழா நடந்தது. பர்கூர் ஒன்றியம், கந்திகுப்பத்தில் உள்ள தூய விண்ணரசி அன்னை ஆலயத்தின், 40ம் ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த, 12ல், தர்மபுரி மறை மாவட்ட முதன்மை குரு அம்புரோஸ் தலைமையில், கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 18 வரை, ஆலயத்தில் தியான உரை, திருப்பலி நடந்தது. கடந்த, 19ல் காலை, 8:00 மணிக்கு, திருவிழா திருப்பலியும், புது நன்மை, உறுதி பூசுதல் திருவருட்சாதனம் வழங்குதல் நிகழ்ச்சிகள், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் நடந்தது. நேற்று காலை, 6:15 மணிக்கு, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.