விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் தேரோட்டம்
ADDED :2604 days ago
விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிரம்மோற்ஸவ விழா ஆக.,15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா, மண்டப படிகளில் வழிபாடு நடந்தன. ஆக., 22 ல்திருக்கல்யாணம் நடந்தது. நேற்று 11 :00மணிக்கு தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாளுடன் காட்சி அளித்தார். தேரை திரளான பக்தர்கள் இழுத்துச் சென்றனர். மேலரதவீதி, தெப்பம் வழியாக சென்று மீண்டும் சிவன் கோயில் வந்தடைந்தது. ஏற்பாடுகளை தக்கார் ஆவுடைம்மாள், நிர்வாக அதிகாரி சத்திய நாராயணன், நிர்வாக அறங்காவலர் ராமதாஸ் செய்தனர்.