உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 250 திருமணங்களால் குலுங்கியது திருப்பரங்குன்றம் கோயில்

250 திருமணங்களால் குலுங்கியது திருப்பரங்குன்றம் கோயில்

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் திருமண மண்டபங்களில் நேற்று ஒரே நாளில் 250 திருமணங்கள் வரை நடந்ததால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.இங்கு சுப்பிரமணிய சுவாமி மணக்கோலத்தில் இருப்பதால் திருமணம் நடத்த பலரும் விரும்புகின்றனர். இதனால் இங்கு 300 திருமண மண்டபங்கள் உள்ளன. கோயிலில் சுவாமி முன் திருமணம் செய்ய பதிவுக்கட்டணம் 3 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வசதியில்லாதவர்கள் திருவாட்சி மண்டபத்தில் திருமணத்தை நடத்துவர். நேற்று மட்டும் கோயிலுக்குள் 80 பதிவு பெற்ற திருமணங்கள் நடந்தன. 30க்கும் மேற்பட்ட திருமணம் திருவாட்சி மண்டபத்திலும் நடந்தன. ஊருக்குள் அனைத்து மண்டபங்களிலும் திருமணம் நடந்தது. நேற்று ஒரே நாளில் 250 திருமணங்கள் நடந்தது. வாகனங்களில் மக்கள் குவிந்ததால் குன்றமே குலுங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !