வரலட்சுமி விரதம்: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2705 days ago
கோவை: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவை, ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவை, ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விழாவை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. துர்கை, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து, பிரசாதம் வழங்குதல், சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மன்களை வழிபட்டுச் சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.