முத்தாளம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
ADDED :2600 days ago
சென்னிமலை: பனியம்பள்ளி முத்தாளம்மன் மற்றும் பச்சதொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. சென்னிமலையை அடுத்த, பனியம்பள்ளி கிராமத்தில், முத்தாளம்மன் மற்றும் பச்சதொட்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் விஜய நகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. சேதமடைந்ததால் இடித்து விட்டு, புதியதாக கருவறை, விமானம் மற்றும் மகா மண்டபம், அர்த்த மண்டபம், உள்ளிட்ட திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ராஜப்பா சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.