பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த வரலாறு
ADDED :2597 days ago
சுகலன் என்னும் வேளாளரின் மக்கள் பன்னிரெண்டு பேர், இவர்கள் வியாழபகவானின் சாபத்திற்கு ஆளாகி குருவித்துறைக்கு அருகே உள்ள காட்டில் பன்றி அரசரின் குழந்தைகளாய்ப் பிறந்தனர். இராசஇராச பாண்டியன் வேட்டையாட வந்த போது பன்றி அரசனும் அவனது மனைவியும் பாண்டியனுடன் போரிட்டு இறந்தனர். பெற்றோரை இழந்த பன்றிக்குட்டிகளின் துயர் தீர சோமசுந்தரக் கடவுளே தாய்ப்பன்றியின் வேடந்தாங்கி வந்து முலைப்பால் தந்து சாபவிமோசனம் அருளினார். சாபம் நீங்கி, மனித உடலும் பன்றி முகமும் கொண்ட சகோதரர்கள் பன்னிரண்டு பேரும் சகல கலைகளிலும் சிறந்தவர்களாய் பன்றி மலையிலயே வசித்து வந்தனர்.