பழநி முருகன் கோவில் ரோப்கார் 29 முதல் மீண்டும் இயக்கம்
ADDED :2648 days ago
பழநி: பழநி முருகன் கோவில், ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணியில், கம்பி வடத்தில் பெட்டிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடக்கிறது. இதைஅடுத்து, வரும், 29 முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் இயக்கப்பட உள்ளது.பழநி முருகன் கோவிலில், ரோப்கார் காலை, 7:00 மணி முதல், இரவு, 8:30 மணி வரை தினமும் இயக்கப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை,12 முதல் ரோப்கார் நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக புதிய கம்பி வடத்தில் பெட்டிகள் பொருத்தப்பட்டு குறிப்பிட்ட அளவு எடைக்கற்கள் வைத்து, சோதனை ஓட்டம் நடக்கிறது. அதில் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்பட்டு, ரோப்கார் கமிட்டியினர் ஒப்புதலுடன் வரும், 29ல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட உள்ளதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.