திருவண்ணாமலை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் துவக்கம்
ADDED :2599 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, பந்தக்கால் முகூர்த்தத்துடன் நேற்று துவங்கியது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் தீப திருவிழா, நவ., 14ல், கொடியேற்றத்துடன் துவங்கி, 23ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.இதற்காக நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக் கப்பட்டு, சம்பந்த விநாயகர் ஆலயத்தில், பந்தக்காலுக்கு நடப்பட்ட மூங்கில் கொம்புக்கு அபிஷேகம், பூஜை நடந்தது.ராஜகோபுரம் எதிரில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, காலை, 6:53 மணிக்கு பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.