வத்திராயிருப்பு மாரியம்மன் கோயிலில் வளைகாப்பு வழிபாடு
ADDED :2599 days ago
வத்திராயிருப்பு: வரலட்சுமி விரத தினத்தை முன்னிட்டு வத்திராயிருப்பு மாரியம்மன் கோயிலில் கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு வழிபாடு நடந்தது. வத்திராயிருப்பு கீழரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி விரத தினத்தை முன்னிட்டு விரத விழா நடந்தது. இதற்காக கடந்த இருநாட்களாக கர்ப்பிணிகள் வீடு வீடாக சென்று அழைக்கப்பட்டனர். நேற்று அதிகாலையில் அம்மனுக்கு 18 வகை அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து அம்மனுக்கு 5 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வரலட்சுமி பூஜை நடந்தது. கோயில் முன்பாக கர்ப்பிணிகள் அமரவைக்கப்பட்டு சுமங்கலி பெண்களால் வளையல்கள் அணிவிக்கப்பட்டது. அன்னதானமும் நடந்தது.ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் திருப்பதி, தனலட்சுமி, மாரீஸ்வரி, தனம், ராணி, அனிதா, செல்வி செய்தனர்.