சென்னை சங்கர மடத்தில் லட்சுமி குபேர ஹோமம்
ADDED :2648 days ago
சென்னை : காமாட்சி மண்டலி டிரஸ்ட் சார்பில், 108 நாட்கள் நடக்கும், லட்சுமி குபேர ஹோமத்தை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேற்று துவக்கி வைத்தார்.சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள சங்கர மடத்தில், காமாட்சி மண்டலி டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும், 108 நாட்கள் ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு, 108 நாட்கள்நடக்கும், லட்சுமி குபேர ஹோமம், நேற்று துவங்கியது.செல்வ வளம் பெருகவும், வறுமை நீங்கவும் நடத்தப்படும் இந்த ஹோமத்தை, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், நேற்று காலை துவக்கி வைத்தார். ஹோமத்தில் பங்கேற்ற பெண்களுக்கு, சேலைகளை, கவர்னர் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காமாட்சி மண்டலி டிரஸ்ட் அறங்காவலர், நாராயணன் செய்திருந்தார். லட்சுமி குபேர ஹோமம், டிச., 9ம் தேதி வரை நடக்கிறது.