உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வரலட்சுமி விரத சிறப்பு பூஜை

கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வரலட்சுமி விரத சிறப்பு பூஜை

கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வரலட்சுமி விரத சிறப்பு பூஜை நடந்தது. மகாலட்சுமி அம்மனுக்கு நாணயங்களால் அபிஷேகம், சர்வ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. சுருளிமலை பழநிமலை பாதயாத்திரை குழுவினர் பஜனைப் பாடல்கள் பாடினர்.

* போடி திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் வரலட்சுமி பூஜையை முன்னிட்டு 3008 வளையல் அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !