காடாம்பாடி விநாயகர் கோவிலில் கலச பூஜை
ADDED :2649 days ago
சூலுார்: சூலுார் அடுத்த காடாம்பாடி பெரிய விநாயகர் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு வரலட்சுமி பூஜை, கலசபூஜை மற்றும் சுமங்கலி பூஜை நேற்று காலை, 9:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது.துர்க்கையம்மன் சன்னதிக்கு முன் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த, 108 கலசங்களுக்கு, புஷ்பம், மஞ்சள் அரிசி மற்றும் குங்குமத்தால் பெண்கள் அர்ச்சனை செய்தனர்.மஞ்சள் சரடு, பூ உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.