மழை வேண்டி பள்ளி மாணவர்கள் வருண ஜெபம்
ADDED :2707 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சபா நடேச அய்யர் துவக்கப்பள்ளி மாணவர்கள் மழை வேண்டி வருண ஜெபம் செய்தனர். ராமநாதபுரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக சரியான மழை இல்லாமல், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். இந் நிலையில் சபா நடேச அய்யர் துவக்கப்பள்ளியில் காலை 10:30 மணிக்கு பள்ளி மாணவர்கள் மழை வேண்டி வருண ஜெபம் செய்தனர். தாளாளர் பி.கே.மணி, தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ராபர்ட் செல்வராஜ் முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் சொர்ண கணபதி, வருண ஜெபத்தினை நடத்தினார். இதில் மாணவர்கள்
பங்கேற்றனர்.