உடுமலையில் வரலட்சுமி விரதம்: சிறப்பு வழிபாடு
ADDED :2600 days ago
உடுமலை: உடுமலையில், வரலட்சுமி விரதத்தையொட்டி, சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சுமங்கலி பெண்கள், கணவரின் ஆயுள் மற்றும் இல்வாழ்க்கை சிறப்பாக இருக்க, வரலட்சுமி விரதமிருந்து வழிபடுகின்றனர். ஆவணி மாதத்தில் வரும் இந்த வழிபாட்டையொட்டி, வீடுகளில், லட்சுமிதேவியை அலங்கரித்து, சுமங்கலி பெண்கள் சிறப்பு பூஜை நடத்தியும் தேவியின் அருளைப்பெறுகின்றனர். இதையொட்டி, நேரு வீதி மற்றும் தளி ரோடு காமாட்சியம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில்களில், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.