உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலங்காநல்லுார் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் வருண ஜெபம்

அலங்காநல்லுார் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் வருண ஜெபம்

அலங்காநல்லுார், பாலமேடு அருகேயுள்ள சாத்தையாறு அணை பகுதி கடந்த 5 ஆண்டுகளாக மழையின்றி வறண்டுள்ளது. 2000 ஏக்கர் தரிசாக கிடக்கிறது. மானாவாரி விவசாய நிலங்களும் கடும் வறட்சியின் பிடியில் உள்ளன. இந்நிலையில் அலங்காநல்லுார் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் விவசாயிகள் மற்றும் பக்தர்கள் சார்பில் மழைவேண்டி வருணஜெபம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு யாகபூஜை நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகி சீனிவாசன் மற்றும் விவசாயிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !