உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாயி கோவிலில் கும்பாபிேஷகம்

சீரடி சாயி கோவிலில் கும்பாபிேஷகம்

அன்னுார்:அச்சம்பாளையத்தில், ஸ்ரீஆனந்த சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக விமான கோபுரம் அமைக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிேஷக  விழா நேற்று முன் தினம் நடந்தது.அதிகாலை 3:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, மண்டப பூஜை, கலச பூஜை, யாத்ரா தியானம் நடந்தது. காலை 6:40 மணிக்கு  கோபுரத்திற்கு கும்பாபிேஷகம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !