உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி சக்தி மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா

சாயல்குடி சக்தி மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா

சாயல்குடி:சாயல்குடி சக்தி மாரியம்மன் கோயிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு நிறைவையொட்டி வருடாபிஷேக விழாவும், 108 சங்குகளால் அலங்கரிக்கப்பட்ட  சங்காபிஷேகமும் நடந்தது. மூலவர் சக்தி மாரியம்மனுக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை மாங்கல்ய, சக்தி ஸ்தோத்திரம் உள்ளிட்டவை  நடந்தது. பூஜைகளை தனசேகர் குருக்கள் செய்திருந்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வணிக வைசிய உறவின்முறையாளர்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !