அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம்
ADDED :2605 days ago
சேலம்: குருவாயூரப்பன் கோவிலில், அத்தப்பூ கோலமிட்டு, பெண்கள் ஓணம் கொண்டாடினர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சேலம், பொன்னம்மாபேட்டை, மிலிட்டரி சாலையிலுள்ள, கிருஷ்ண ஆசிரமம், குருவாயூரப்பன் கோவிலில், நேற்று, பல வண்ண மலர்களால், 11 அடுக்கு அத்தப்பூ கோலமிட்டு, வழிபாடு நடத்தினர். குருவாயூரப்பன், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். இங்கு, செப்., 2ல், கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமியை முன்னிட்டு, ஏராளமான குழந்தைகள், கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வருவர். செப்., 9ல், உறியடி உற்சவம் நடக்கிறது என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.