உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜநாக காளியம்மன் கோயிலில் மக்கள் நலன் வேண்டி யாகம்

ராஜநாக காளியம்மன் கோயிலில் மக்கள் நலன் வேண்டி யாகம்

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கிருஷ்ணாபுரம் ராஜநாக காளியம்மன் கோயிலில் உலக மக்கள் நலன் வேண்டி மகா யாகம் மற்றும் பவுர்ணமி பூஜை நடந்தது. இக்கோயிலில் பரஞ்சோதி சித்தர் பீடத்தில் மூலவர் சன்னதி முன் காலை 7:00 மணிக்கு பவுர்ணமி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் மகாயாகம் துவங்கியது. அம்மனுக்கு அபிேஷகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சுயம்புவான பானலிங்கம் மற்றும் பரிவார தெய்வங்களான தேவியர்,நவக்கிரகம்,விநாயகர், முருகன், வயிரவர், வீரபத்திரர் ஆகியோருக்கும் அபிேஷக ஆராதனை நடந்தன. இந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில அமைப்பாளர் சுடலைமணி, மாவட்டத் தலைவர் நாகசுந்தரம், மாவட்டச் செயலாளர் லெட்சுமணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !