ஆவணி அவிட்டத்தில் சென்னிமலை முருகனுக்கு பூணூல்
ADDED :2712 days ago
சென்னிமலை: ஆவணி அவிட்டத்தை ஒட்டி, சென்னிமலை முருகப் பெருமானுக்கு, பூணூல் அணிவித்து, சிறப்பு பூஜை நடந்தது. ஆவணி பவுர்ணமியை ஒட்டி, ஆவணி அவிட்ட விழா, நேற்று கொண்டாடப்பட்டது. சென்னிமலை முருகன் கோவிலில் நடந்த விழாவில், முருகப்பெருமான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர் உட்பட சாமிகளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அபி?ஷக பூஜைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னிமலை முருகன் கோவில் சிவாச்சாரியர்கள், கைலாசநாதர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடத்தி, பூணூல் மாற்றி அணிவித்தனர்.