விருதுநகரில் கஞ்சி கலயம் ஊர்வலம்
ADDED :2596 days ago
விருதுநகர்: விருதுநகர் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், விவசாயம் செழிக்க மழை வேண்டி கஞ்சி கலயம் ஊர்வலம் நடந்தது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பெண்கள் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து சென்றனர். வெயிலுகந்தம்மன் கோயிலில் துவங்கிய ஊர்வலம் வடக்கு ரதவீதி, கச்சேரி ரோடு வழியாக மாலைப்பேட்டை தெரு வழிபாடு மன்றத்தில் முடிந்தது. ஏற்பாடுகளை மன்றத் தலைவர் பழனிச்சாமி செய்தார்.