வரதராஜ பெருமாள் கோவிலில் இடி தாக்கி அம்மன் சிலை சேதம்
ADDED :2707 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இடி தாக்கியதில், அம்மன் சிலை சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, விக்கிரவாண்டி தாலுகா ஏழுசெம்பொன் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இடி தாக்கியது. இதில், கோவில் கோபுரத்தில் உள்ள அம்மன் சிலையின் அடி பீடம் உடைந்து, சேதமடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.