பூணூல் அணிவித்து ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்
ADDED :2657 days ago
கிருஷ்ணகிரி: ஆவணி அவிட்டம் என்னும், ஆண்டுச் சடங்கு, உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி, ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய, பவுர்ணமியில் கடைப்பிடிக்கும் வழிபாடாகும். இது, ரிக், யஜூர் வேதங்கள் கொண்டாடும் தினமாகும். அப்போது, தந்தை, ஆச்சார்யர், குரு இவர்களில், யாரேனும் ஒருவரின் மூலம், பூணூலை அணிந்து கொள்ள வேண்டும். நேற்று ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பழையபேட்டை கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், பூணூலை புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இதில், யாகம் வளர்த்து, மந்திரங்கள் முழங்க, 50க்கும் மேற்பட்டோர் பூணூலை மாற்றிக் கொண்டனர். பின், காயத்திரி மந்திரத்தை படித்தனர்.
* தர்மபுரி சத்திரத்தில், தர்மபுரி மாவட்ட பிராமணர்கள் சங்கம் சார்பில் நடந்த, நிகழ்ச்சியில், பூணூல் அணிந்தனர்.