உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலுார் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

திருக்கோவிலுார் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

 திருக்கோவிலுார்:  திருக்கோவிலுார், என்.எஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் கோவிலில் சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம் நடந்தது. திருக்கோவிலுார்‚ என்.ஜி.ஜி.ஓ., நகர்‚ ராகவேந்திரர் கோவிலில் சுவாமிகளின் ஆராதனை விழா நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு‚ நிர்மால்ய அபிஷேகம், 8:30 மணிக்கு‚ ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், அரிவாயுஸ்துதி பாராயணம் நடந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு‚ ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு பஞ்சாமிருத அபிஷேகம், வெள்ளிகவச அலங்காரம், மகா தீபாராதனை‚ 11:00 மணிக்கு‚ பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப் பட்டது. மாலை 6:00 மணிக்கு‚ ஸ்வஸ்தி வாகனம், மங்கள ஆரத்தி, 7:00 மணிக்கு‚ பரதநாட்டியம் நடந்தது. கோவில் நிர்வாகி கோபி மற்றும் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !