30ம் தேதி முதல் பழநி, ‘ரோப்கார்’ மீண்டும் இயங்கும்
ADDED :2596 days ago
பழநி: பழநி முருகன் கோவிலில், வரும், 30 முதல் ‘ரோப்கார்’ மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், ‘ரோப்கார்’ இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக, ஜூலை,12 முதல், ரோப்கார் நிறுத்தப்பட்டது. நேற்று விபத்து மீட்பு பயிற்சி நடந்தது. அதில் ரோப்கார் திடீரென நின்றுபோனால், 200 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் தொங்கும் பெட்டியில் இருந்து, பக்தர்களை டோலி மூலம் மீட்பது குறித்து, பணியாளர்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். வரும், 30 முதல் ரோப்கார் இயக்கப்பட உள்ளதாக, கோவில் இணை ஆணையர் தெரிவித்தார்.