உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பவித்ர உற்சவம்

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பவித்ர உற்சவம்

திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், 26ம் தேதி, பவித்ர உற்சவம் துவங்கியது. கோவில்களில் நடைபெறும் நித்ய பூஜைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நிவர்த்தி செய்து, இறைவனிடம் வேண்டுவதே பவித்ர உற்சவம். தினமும் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து, காலை, 10:00 மணிக்கும், இரவு, 7:00 மணிக்கும், ஹோமம் நடைபெறுகிறது. மாலை, 5:30 மணி அளவில், பெருமாள் மாடவீதி புறப்பாடு நடைபெறும். ஏராளமான பக்தர்கள் ஹோமம் நடைபெறும் இடத்தில் அமர்ந்து பெருமாளை வழிபடுவர்.ஏழு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம் வரும் 1ம் தேதி, இரவு, 10:00 மணிக்கு, மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைகிது. செப்.,1 நள்ளிரவு 12:00 மணியளவில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !