வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி: வரட்டனப்பள்ளி அருகே, வீர ஆஞ்சநேயர் கோவில் இரண்டாமாண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அடுத்த தேசுப்பள்ளி முருகப்பன் கொட்டாய் வீர ஆஞ்சநேயர் கோவில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா கடந்த, 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 26ல் காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், வேதபாராயணம், சீதா ராம லட்சுமண காயத்ரி ஹோமம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தனர். பின், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. மதியம், 2:00 மணிக்கு, சீதா, ராமர் திருக்கல்யாணம் நடந்தது. மாலை சுவாமி திருவீதி உலா வந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை, மஹா மங்கள ஆர்த்தி, சர்வதரிசனம், தீர்த்தப்பிரசாதம் ஆகியவை நடைபெற்றது.