பவானி கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2598 days ago
பவானி: வலம்புரி வித்யா கணபதி ஆலயத்தில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பவானியில், மீனாட்சி கல்யாண மண்டப சாலையில், வலம்புரி வித்யா கணபதி கோவில் உள்ளது. மூன்றாமாண்டு துவக்க விழாவை ஒட்டி, கூடுதுறையில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு, நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது. பின், உலக நன்மை வேண்டி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.