நஞ்சுண்டேஸ்வரர் கோவில் குடமுழுக்கு: பெண்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலம்
ADDED :2598 days ago
இடைப்பாடி: இடைப்பாடி, நஞ்சுண்டேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா வரும், 30ல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று ஏராளமான பெண்கள் தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.இடைப்பாடியில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில், சுப்பிரமணியர் சன்னதி, பாலஆஞ்சநேயர் சன்னதி ஆகியவற்றை, முதல்வர் பழனிசாமி தன்னுடைய செலவில் கட்டியுள்ளார். முழுமையாக ஆலயப்பணிகள் முடிவடைந்த நிலையில், குடமுழுக்கு விழா வரும், 30ல் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். விழாவை முன்னிட்டு நேற்று, கல்வடங்கத்தில் இருந்து, காவிரியாற்று நீர் கொண்டு வரப்பட்டது. குடமுழுக்கு விழா நிர்வாகிகள் நகரமன்ற முன்னாள் தலைவர் கதிரேசன், ஐந்து ஊர் கவுண்டர்கள், காணியாச்சிகாரர்கள் தலைமையில் நடந்த ஊர்வலத்தில், ஐநூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.