உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இதுதான் ’வாய் அலங்காரம்’

இதுதான் ’வாய் அலங்காரம்’

ஒரு முறை திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் ரயிலில் வாரியார் பயணம் செய்தார்.  அப்போது ஒரு இளைஞர் “ஐயா!  என் கேள்விக்கு நீங்கள் யோசிக்காமல் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார். வாரியார் திகைத்துப் போனார்.  அந்த இளைஞர், ’வடை சாப்பிடுகிறேன்; இட்லி சாப்பிடுகிறேன்; பால் குடிக்கிறேன்’ என்று சொல்கிறோம். வெற்றிலையை மட்டும் ’வெற்றிலை சாப்பிடுகிறேன்’ என நாம் சொல்வதில்லை ’வெற்றிலை போடுகிறேன்’  என்பது ஏன்” எனக் கேட்டார். “ பசியாற உதவும் இட்லி, தோசை போன்றவற்றை ’சாப்பிடுகிறேன்’ என்று தான் சொல்ல வேண்டும். சட்டை, செயின், மோதிரம் போன்றவை உடம்புக்கு அலங்காரமாக இருப்பதால் ’சட்டை, செயின் போடுகிறேன்,’  என்கிறோம். அது போல, வெற்றிலை வாய்க்கு அலங்காரம் என்பதால் இருப்பதால், அதையும்  ’போடுகிறோம்’ வரிசையில் சேர்த்து விட்டோம்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !