அம்மன் கை!
ADDED :2598 days ago
பாலக்காடு அருகே ஒலவக்கோடு சந்திப்பை அடுத்து ‘ஏமூர் பகவதி கோயில்’ உள்ளது. ஒரு துறவிக்கு பகவதி அம்மன் காட்சி தருவதாக ஒப்புக்கொண்டபோது, அந்த சமயத்தில், வேறு எவரும் அங்கே இருக்கக் கூடாது என்ற விதியை விதித்தாராம். ஆனால் காட்சிதர முற்படும்போது, ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். அதனால் கோபம் கொண்ட அம்மன், எவருக்கும் காட்சி தராமல் பூமிக்கடியிலேயே மறைந்து, தன் கையை மட்டும் மேலே காட்டியருளினாளாம். இன்றும் அவ்வாறே இக்கோயிலில் அம்மன் அருள்கிறாள்.