காது குத்தி விநாயகர்
ADDED :2598 days ago
புதுச்சேரியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள மரக்காணத்தில் கிரிஜாம்பாள் சமேத பூமீஸ்வரன் கோயில் உள்ளது. இங்குள்ள வல்லப விநாயகர் சன்னதியில் குழந்தைகளுக்குக் காது குத்தும் வைபவம் நடைபெறுகிறது. இதனால் இவர் காது குத்தி விநாயகர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள துர்க்கை குடை, மாலை, துவாரபாலகிகளுடன் காணப்படுகிறார். புதுவீடு, கட்டி கிரகப்பிரவேசம் செய்பவர்கள் இத்தலத்துக்கு வந்து பூமீஸ் வரரை பிரார்த்தித்துச் செல்கிறார்கள். ஏற்கெனவே கட்டிய வீட்டில் வாஸ்து பிரச்னையால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கிடவும் இங்கே வந்து அருள் பெறுகிறார்கள்.