மாரியம்மன் எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :2597 days ago
சின்னசேலம்: சின்னசேலம் மாரியம்மன் எல்லையம்மன் கோவில் தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி, அம்மனுக்கு கடந்த 8 ந்தேதி முதல் பாரதம் பாடினார். தொடர்ந்து, அம்மனுக்கு 25 ந் தேதி வரை தினசரி பூஜை கள், சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தேர்வடம் பிடித்து இழுத்தனர். நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த திருத்தேர், பொருள்கோவில்வீதி, சிவன்கோவில் வீதி வழியாக சன்னதியை வந்தடைந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம நடந்ததால், அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.