மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பால் குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
ADDED :2703 days ago
குளித்தலை: மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள், பால்குடம், முளைப்பாரி எடுத்து, ஊர்வலம் சென்றனர். குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் அருகே, பட்டவர்த்தி கிராமத்தில், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, பக்தர்கள், ராஜேந்திரம் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக் குடம், பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துக்கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். பின் அவற்றை கோவிலில் வைத்து, அம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். யாக சாலையில், இரண்டு கால பூஜை செய்யப்பட்டு, இன்று காலை, 11:30 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இத்தகவலை விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.