திருப்பதிக்கு பாதயாத்திரை
ADDED :2699 days ago
வானுார்: கிளியனுார் ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் பஜனை குழுக்கள் திருப்பதிக்கு முதலாம் ஆண்டு பாதயாத்திரை மேற்கொண்டனர். வானுார் அருகே கிளியனுார் வைகுண்டவாச பெருமாள் பஜனை குழுவினர் கடந்த 2ம் தேதி பஞ்சமி திதி உத்திராடம் நட்சத்திரத்தில் துளசி மாலையணிந்து விரதமிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை பயணம் மேற்கொண்டனர். முன்னதாக, ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் மாலை சாமி அலங்காரத்துடன், பஜனை கோஷ்டிகளோடு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தனர்.