உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுதர்ஸண ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா

சுதர்ஸண ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா

கோபி: கோபி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, மகா சுதர்ஸண ?ஹாமத்துடன், நேற்று துவங்கியது. அர்ச்சகர்கள் குழுவினர், சுதர்ஸண ?ஹாமம் மற்றும் முதல்கால பூஜையை துவக்கினர். பின், ஆச்சார்யவர்ணம், வாஸ்து பூஜை ?ஹாமங்கள், வேதபாராயண, திவ்யபிரபந்தம் நடந்தது. இதில் கோபி, அக்ரஹார வீதி, தேர்வீதி, வாய்க்கால்ரோடு பகுதி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இன்று மூன்றாம் மற்றும் நான்காம் கால பூஜை நடக்கிறது. நாளை, காலை, 5:00 மணிக்கு ஐந்தாம் கால பூஜை, காலை, 7:30 மணிக்கு மேல், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் நாகராஜ் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !