மழை வேண்டி ராஜமாகாளியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :2601 days ago
திருப்புவனம்: திருப்புவனம் அருகே அல்லிநகரம் ராஜமாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக வந்தனர். அல்லிநகரம் கிராமத்தில் ராஜமாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முளைப்பாரி திருவிழா நடக்கும். மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கிராமமக்கள் நோய் நொடியின்றி வாழவும் நடக்கும் இத்திருவிழா இந்தாண்டு 20ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 8ம் நாளான நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளை சுமந்தபடி ஊரை வலம் வந்தனர். அல்லிநகரம் தண்டீஸ்வர அய்யனார் கோயில் முன் முளைப்பாரியை இறக்கி வைத்து கும்மி பாட்டு, ஒயிலாட்டம் நடத்தப்பட்டன.
பின் அல்லிநகரம் குளத்தில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன.