ஸ்ரீதேவி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED :2704 days ago
கரூர்: கரூர், ஸ்ரீ தேவி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கரூர், பாரதியார் தெருவில் ஸ்ரீ தேவி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் அமராவதி ஆற்றிலிருந்து, தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். அதன் பின் விக்னேஸ்வரர் பூஜையுடன் கணபதி ?ஹாமம், நவக்கிரக ?ஹாமம், மகாலட்சுமி ?ஹாமம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜை, மூலமந்திர ?ஹாமம், தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 4:30 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜையுடன், இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின் பூர்ணாஹூதி நடந்தது. 8:30 மணிக்கு, ஸ்ரீதேவி பகவதி அம்மன் பரிவார தெய்வங்களுக்கு சிவச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.