செல்லாண்டியம்மன் கோவிலில் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம்
ADDED :2594 days ago
மகுடஞ்சாவடி: செல்லாண்டியம்மன் கோவிலில், வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. இளம்பிள்ளை அருகே, இடங்கணசாலை, இ.காட்டூரிலுள்ள, செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த, 29ல், சித்தேஸ்வரர் கோவிலிலிருந்து, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, மேள, தாளம் முழங்க, யாகசாலையிலிருந்து, பட்டாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு பூஜை செய்து, புனித தீர்த்தம் தெளித்து, கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. அதேபோல், இடைப்பாடி அருகே, சவுரி பாளையத்தில், விநாயகர், சக்திமாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.