கிருஷ்ண ஜெயந்தி விழா சென்னையில் கொண்டாட்டம்
ADDED :2638 days ago
சென்னை: சென்னை, கவுடியா மடத்தில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னை, சோழிங்கநல்லூர், அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ண யாகம் நடத்தப்பட்டது. சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, 90 ஆண்டுகள் பழமையான வேணுகோபால சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்துடன், சுவாமி அருள்பாலித்தார். இதேபோல, பல்வேறு கிருஷ்ணர் கோவில்களில் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன.